எறும்புதின்னி கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது
எறும்புதின்னி கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது
பள்ளிப்பட்டு வட்டம் வெளியகரம் ஊராட்சியில் எரும்பு திண்ணி கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த 5- பேர் , தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்த வனத்துறையினர் ,
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் வெளியகரம் ஊராட்சியில் எறும்புத்தின்னி கடத்தி விற்க முயற்சி செய்வதாக பள்ளிப்பட்டு வனசரக அலுவலருக்கு தகவல் செல்கிறது அவரது ஆலோசனையின் பேரில் பள்ளிப்பட்டு வனச்சாரக அலுவலகத்தில் இருந்து:- வனவர்கள் மற்றும் வனப் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்குன்று காட்டுப்பகுதியில் சோதனை மேற்கொள்ளும் பொழுது வேகமாக வந்த ஆந்திர பதிவினை கொண்ட ஆட்டோவை சோதனை மேற்கொண்டபோது அந்த ஆட்டோவில் ஒரு பையில் எறும்பு தின்னி 12.300 கிலோ இருப்பதை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இதனை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 1)பிரகாஷ் வயது (53), 2) சர்புதீன் வயது (39) குடியாத்தம், 3) ஆனந்தராஜ் வயது (31) வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சார்ந்தவர்,
இவர்களுடன் இருந்து எறும்பு தின்னி கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
4) பிரசாத் வயது (58)
ஆந்திர மாநிலம் கோடூர் மண்டலம்,
5) சேல பத்திர ரெட்டி வயது (58), ஜெகதான மண்டலம் ஆந்திர மாநிலம்
6) மனோஜ் வயது (24) கூடூர் கிராமம் திருப்பதி பகுதியை சேர்ந்தவர்
7) ஜெகதீஷ் வயது (30) கூளூர் கிராமம் திருப்பதி பகுதியை சார்ந்தவர்
8) முனி இராஜரெட்டி வயது (58)
ஆந்திர மாநிலம் திருப்பதி ஆகிய எட்டு பேரும் மேற்படி இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஆட்டோவில் எறும்புத்தின்னியை கடத்தி வந்தது தெரிய வந்தது மேற்கண்ட எட்டு பேரையும் வனத்துறை சட்டத்தின் கீழ் கைது செய்து
வனத்துறை அதிகாரிகள் பள்ளிப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் இந்த எரும்பு தின்னி வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இவர்களிடம் 20 லட்சம் ரூபாய் பேசியுள்ளனர்
பணத்திற்கு ஆசைப்பட்டு இதனை கடத்தியதாக வனத்தில் இருந்து பிடித்ததாக எட்டு பேரும் தகவல் தெரிவித்துள்ளனர்
மேற்படி எறும்புத்தின்னியை கடத்தி வந்த எட்டு பேரையும் வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் இந்த எட்டு பேரையும் புழல் சிறையில் அடைத்தனர் வனத்துறை அதிகாரிகள்..