விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம்

X
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சீத்தூரணி சாலையில் பிஸ்மில்லா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், கழிவறைக்கான ஆழ்குழி உறைகிணறு அமைக்க சுமார் 25 அடி பள்ளம் தோண்டும் போது கடந்த 21.09.2024 அன்று பணியை மேற்கொண்ட சீத்தூரணி கிராமத்தை சேர்ந்த ராமையா(62) மற்றும் திருவுடையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(52) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இருவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் வழங்கப்படும் பணியிட விபத்து மரண நிவாரணத் தொகையாக தலா ரூ.5,00,000/- வீதம் மொத்தம் ரூ.10,00,000/-ற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலையில் வழங்கினார்.
Next Story

