விவசாயிகளுக்கு வங்கி ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு!

விவசாயிகளுக்கு வங்கி ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு!
விவசாயி  டிராக்டர் வாங்க பெற்ற கடனை திருப்பி செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை 30 ஆண்டு காலம் தாழ்த்தி ஒப்படைத்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி  ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
விவசாயி டிராக்டர் வாங்க பெற்ற கடனை திருப்பி செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை 30 ஆண்டு காலம் தாழ்த்தி ஒப்படைத்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா வடக்குப்பட்டியைச் சார்ந்த விவசாயி பாலகிருஷ்ணன்;; என்பவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயத் தொழிலுக்காக டிராக்டர் வாங்க கடன் பெற்றுள்ளார். அதற்காக தனது சொத்துக்களின் அசல் ஆவணங்களை வங்கியில் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வங்கிக் கடன் முழுவதையும் செலுத்தி விட்டார். ஆகவே தனது சொத்துக்களின் அசல் ஆவணங்களை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சுமார் 30 ஆண்டு காலம் தாழ்த்தி அசல் ஆவணங்களை மனுதாரருக்கு வழங்கியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 5 இலட்சம், வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் 5 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story