கொட்டாரம் பேரூராட்சியில் 5 கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்

கொட்டாரம் பேரூராட்சியில் 5 கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
கோரிக்கைகள் வலியுறுத்தி
குமரி மாவட்டம் கொட்டாரம் பேரூராட்சி கூட்டம் இன்று (27-ம் தேதி) பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி செல்வக்கனி தலைமையில் கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி துணைத்தலைவி விமலா உட்பட கவுன்சிலர்கள் பொன்முடி, தங்ககுமார், ரெத்தினம், சரோஜா ஆகிய 5 பேர் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.        வெளி நபர்கள் எழுதி தரும்  தீர்மானங்களின்படி தீர்மான நோட்டில் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும் . மன்றம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை  உறுதிப்படுத்த வேண்டும் . பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,  குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே பணிகள் நடைபெறுவதை தவிர்த்து,அவ்வாறு நடைபெறும் பணிகளை ரத்து செய்ய வேண்டும். முறையான அனுமதி பெறாமல் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய இளநிலை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Next Story