புதுக்கோட்டை :டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிப்பு!

ஆரோக்கியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில், மழை, குளிர் என்று 3 சீதோஷ்ணம் நிலவுவதால் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோர் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 77 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் பிரத்யேக வார்டு திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம் கள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story