படியூர் பள்ளிக்கு 5 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
Kangeyam King 24x7 |29 Nov 2024 4:31 AM GMT
படியூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் ரூ 5 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் மு.பே.சாமிநாதன் திறந்து வைத்தார்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட படியூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நுண் திறன் கொண்ட இரண்டு வகுப்பறை வசதிகளை (ஸ்மார்ட் வகுப்பறை) செய்து கொடுத்துள்ளார். இந்த வகுப்பறையில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்வழி தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து வகுப்பறையில் பள்ளி மாணவ மாணவியுடன் அமர்ந்து திரையில் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துவதையும், நுன்துறன் துறையில் உள்ள நவீன வசதிகளும் கேட்டறிந்தார்.
Next Story