கரூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 5- தீர்மானங்கள் நிறைவேற்றம்.
Karur King 24x7 |1 Dec 2024 9:26 AM GMT
கரூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 5- தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் 5- தீர்மானங்கள் நிறைவேற்றம். பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்மணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் அழியாபுரம் தங்கவேல், மாவட்டத் தலைவர் நடுப்பட்டி கணேசன், கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியியக்க தலைவர் கோ. ஆலயமணி, செயலாளர் இல. வேலுச்சாமி, துணை செயலாளர் பொன். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தின் நிறைவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் அவர்களை தமிழக முதல்வர் பொதுவெளியில் அநாகரிகமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல,கரூர் மாவட்ட செயலாளராக பி எம் கே பாஸ்கரன், மாவட்ட தலைவராக சோ தமிழ்மணி ஆகியோரை நியமனம் செய்த கட்சியின் நிறுவன தலைவருக்கு நன்றி தெரிவித்தும், டிசம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு கரூர் மாவட்ட பாமக சார்பில் 10,000- பேர் கலந்து கொள்வது எனவும், கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், பயனாளிகள் தேர்வு முழுக்க முழுக்க ஆளும் கட்சியினரின் தலையீட்டின் மூலமாகவே நடைபெறுவதால், இந்த திட்டத்தில் ஊழல் நடைபெறுவதற்கும், அரசு பணத்தை தனியார் கையாடல் செய்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதால், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு அரசு பணிகளில் தனியார் ஈடுபடுவதை தடுத்து, அரசு அலுவலர்கள் நேரடியாக விவசாயிகளைச் சந்தித்து திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றினார்.
Next Story