அமராவதி ஆற்று வெள்ள நீரால் குடிநீர் குழாய்கள் சேதம்.5 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர்

அமராவதி ஆற்று வெள்ள நீரால் குடிநீர் குழாய்கள் சேதம்.5 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர்
அமராவதி ஆற்று வெள்ள நீரால் குடிநீர் குழாய்கள் சேதம்.5 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கட்டளை பகுதியில் காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து அங்கிருந்து கரூர் மாநகராட்சி பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமராவதி அணையில் அதிகப்படியாக திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் குடகனாற்றில் திறக்கப்பட்ட உபரி நீரும் அமராவதி ஆற்றில் கலந்து பின்னர் திரு முக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து சென்றதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கட்டளை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த பிரதான குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் இருந்து நீர் ஆதாரமாக பெற்று வந்த கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3, மண்டலம் 4 பகுதிகளில் சுமார் 5- நாட்களுக்கு பிறகே குடிநீர் விநியோகம் செய்ய இயலும் எனவும், பொதுமக்கள் இருக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கரூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு செய்துள்ளார்.
Next Story