வெள்ளியணை-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை. மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

வெள்ளியணை-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை. மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
வெள்ளியணை-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை. மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு. கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியைச் சேர்ந்தவர் 47 வயது நபர். இவர் நாடக நடிகராக பணியாற்றி வந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், தனது தந்தை தமக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஏப்ரல் 14ஆம் தேதி கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல்துறை ஆய்வாளர் சுமதி, சிறுமியின் தந்தையை போக்சோ மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5-ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தமிழக அரசு 2- லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Next Story