பாரதி நகரில் தவெக சார்பில் விஜய் பயிலகத்தின் 5-வது கிளை திறப்பு விழா.

பாரதி நகரில் தவெக சார்பில் விஜய் பயிலகத்தின் 5-வது கிளை திறப்பு விழா.
பாரதி நகரில் தவெக சார்பில் விஜய் பயிலகத்தின் 5-வது கிளை திறப்பு விழா. கரூரில் தவெக சார்பில் மாவட்டத்தின் 5-வது தளபதி விஜய் பயிலகம் திறப்பு விழா - புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் குழந்தைகளுக்கு ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொழிற்பேட்டை, பாரதி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்டத்தின் 5-வது "தளபதி விஜய் பயிலகம்" திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட தலைவர் மதியழகனுக்கு 13-வது வார்டு பொறுப்பாளர் ரேவந்த் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். தொடர்ந்து தளபதி விஜய் பயிலகத்தை மாவட்ட தலைவர் மதியழகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், கட்சியில் புதிதாக இணைந்த சுமார் 30 பேருக்கு மாவட்ட தலைவர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து 60 சிறுவர், சிறுமியருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story