நெல் கொள்முதலை தனியார் மையம் ஆக்குவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*.
Virudhunagar King 24x7 |23 Dec 2024 3:45 PM GMT
நெல் கொள்முதலை தனியார் மையம் ஆக்குவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*.
நுகர்பொருள் வாணிபக் கழக விருதுநகர் மண்டல அனைத்து தொழிலாளர் சங்கங்களின் சார்பில் நெல் கொள்முதலை தனியார் மையம் ஆக்குவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் வழக்கத்திற்கு மாறாக ( என்சிசிஎப் )தனியார் நிறுவனத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யும் முயற்சியை கைவிட கோரியும், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பருவகால பணியாளர்கள் பணி வாய்ப்பு கேள்விக்குறியாகும் சூழல், உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களையும் கோசங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டி: சண்முகம் - மாநில துணை பொதுச் செயலாளர்
Next Story