இளம் பசுமை ஆர்வலர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கோயம்புத்தூருக்கு 5 நாள்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இளம் பசுமை ஆர்வலர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கோயம்புத்தூருக்கு 5 நாள்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி முகாம்கள் வாராந்திர பயிற்சி முகாம்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இப்பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை குறித்து ஆர்வம் கொண்ட 43 மாணவ, மாணவியர்கள் கோயம்புத்தூரில் உள்ள வனமகள்-IFGTP(institute of forest genetics and tree breeding, Central Academy for state forest services) ) என்ற இடத்திற்கு ஐந்து நாள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனார். இந்த களப்பயணத்தில் கோயம்புத்தூர் ஓசை என்ற சுற்றுப்புற சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர் அமைப்பு மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் சுற்றுப்புற சூழல் மற்றும் கலாச்சார செயல்பாடுகள் குறித்த நிபுணர்கள் உரை, சிறுவாணி மலை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையிடுதல், வன அருங்காட்சியகம் பார்வையிடுதல், டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் வன காப்பகம் பார்வையிடுதல் போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.
Next Story