ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை

ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை
பட்டிவீரன்பட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூரை சேர்ந்த நேருஜி மகன் பூமணி(24) என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் போக்சோ வில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போகசோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்பி பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால் திண்டுக்கல் போகோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள், குற்றவாளி பூமணிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story