ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர்களாக பதவி உயர்வு
Chennai King 24x7 |30 Dec 2024 2:18 PM GMT
தமிழக பிரிவைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்றிரவு பிறப்பித்துள்ள உத்தரவில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், முதல்வரின் முதல்நிலை செயலர் பி.உமாநாத், டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன செயல் இயக்குநர் ராஜேந்திர ரத்னு, உணவு பாதுகாப்பு ஆணையர் ஆர்.லால்வேனா, தமிழக ஆளுநரின் செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் ஆகியோர் முதன்மைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் 2001-ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story