பனச்சமூட்டில் 5 வாகனங்களில் கேரளா கழிவுகள்

பனச்சமூட்டில் 5 வாகனங்களில் கேரளா கழிவுகள்
குமரி
கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் ஹோட்டல் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்று 9-ம் தேதி  காலை பனச்சமூடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.       அப்போது அந்த வழியாக 5 கூண்டு வாகனங்கள் வந்தது சந்தேகம் அடைந்த போலீசார் வாகனங்களை தடுத்த நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஹோட்டலில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள் இருந்தது தெரியவந்தது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்ததாக சிதறால் பகுதியை சேர்ந்த கனகராஜ், மறவன் கோடு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், ரத்னாபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் காட்டாகடை பகுதியை சேர்ந்த சைனு நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் சிண்டோ, செருப்பாலூர் பகுதியை சேர்ந்த பிஜு, திட்டுவிளை பகுதியை சேர்ந்த தர்ஷன், அசாம் மாநிலத்தை சேர்ந்த தௌரக் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story