ரவுடிகள் இருவர் ஓட ஓட வெட்டி படுகொலை 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட ஆவடி மற்றும் பட்டாபிராம் சரக ஆயில்சேரி கிராமம் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன்கள் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின். இரட்டை மலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளன.இவரது தம்பி ஸ்டாலின்.ரவுடி பட்டியலில் C யில் இடம் பெற்றுள்ளார். இதில் ரவுடி ஸ்டாலின் பட்டாபிராம் காவல் நிலைய எல்லை பகுதியான ஆயில்சேரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் ஆவடி காவல் நிலைய எல்லை பகுதியில் வெட்டிகொலை செய்யப்பட்டு இருந்தார். இருவரும் தனி தனியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்து இருவர் சடலத்தையும் மீட்ட பட்டாபிராம் மற்றும் ஆவடி போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இரு கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக மர்ம கும்பளுடன் பட்டாபிராம் அருகே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து இருவரையும் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இதில் பட்டாபிராம் நோக்கி ஸ்டாலினும், ஆவடி நோக்கி இரட்டைமலை சீனிவாசனும் சிதறி ஓடி உள்ளனர். இருந்தபோதிலும் விடாமல் இரு குழுக்களாக துரத்திய 5பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டாபிராமில் ஸ்டாலினையும்' ஆவடி பகுதியில் அண்ணன் ரெட்டைமலை சீனிவாசனையும் வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர்களது முதல் அண்ணன் கக்கன் 2017ம் ஆண்டு பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கஜேந்திரனுக்கு இருந்த 3 மகன்களும் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆயில்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் ஐந்து தனிப்படையில் அமைத்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



