ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 5 கோடி நிலம் மீட்பு தஞ்சை மாநகராட்சி நடவடிக்கை
Thanjavur King 24x7 |22 Jan 2025 9:55 AM GMT
நிலம் மீட்பு
தஞ்சாவூரில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் கிருஷ்ணா நகரில் 9 ஏக்கர் பரப்பிலான நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதை தனி நபர் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பாபு, நகர அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் தொடர்புடைய இடத்தை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஏறத்தாழ ரூ. 5 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு, பாதுகாப்பு வேலியும் அமைத்தனர். மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையையும் அமைத்தனர்.
Next Story