ஸ்ரீரங்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ₹5ஆயிரம் திருட்டு

X
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையவளஞ்சான்வீதியை சேர்ந்தவர் கேச வன் (65). இவர் ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணத்துக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்மஆசாமி திருடி சென்று இருந்தது தெரியவந்தது. இது குறித்து கேசவன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

