புதுக்கடை அருகே பாதை தகராறில் மோதல் 5 பேர் காயம்

புதுக்கடை அருகே பாதை தகராறில் மோதல் 5 பேர் காயம்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் கீழ்குளம்  பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (54). இவர் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வரதராகவன் (47). இவர் ஒரு பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார் .இவர்கள் இருவருக்கும் பாதை பிரச்சனை சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.        இந்த நிலையில் சம்பவ தினம் பிரச்சனைக்குரிய பாதையில் உள்ள புல் பூண்டுகளை ராஜகுமார் அகற்றியுள்ளார். இதை பார்த்த வரத ராகவன் கெட்ட வார்த்தைகள் பேசி, கல்லால் ராஜகுமாரை தாக்கியுள்ளார். இதை கண்ட  ராஜகுமார் மனைவி ஹெலன் செல்வகுமாரி (44), மகன்கள் அனிஷ் (24), அபித் (23) ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அவர்களையும் வரத ராகவன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த 4 பேரும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக  புதுக்கடை போலீசில் புகார் அறுக்கப்பட்டது.          இது போன்று வரத ராகவன் அளித்த புகாரில் ராஜகுமார், ஹெலன் செல்வகுமரி, அனிஷ், அபித் ஆகிய 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதாக புகார் அளித்தார். வரத ராகவனும் காயமடைந்து குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாகவும் அவர்  புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.         போலீசார் இரு தரப்பிலும் 5 பேர் மீது நேற்று   வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story