ராமநாதபுரம் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட கோரி விஸ்வ ஜனசக்தி தொழிற்சங் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஸ்வகர்மா சமூதாயத்திற்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட கோரி விஸ்வ ஜனசக்தி தொழிற்சங் பேரவை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் தமிழகத்தில் கம்மாளர்,கொல்லர்,தச்சர்,கண்ணார்,சிற்பி,தட்டார் ஆகிய உட்பிரிவுகளுடன் இருந்து வருபவர்களை விஸ்வ கர்மா சமூதாயத்தினருக்கு அனைவருக்கும் இந்து விஸ்வ கர்மா என ஓருங்கிணைத்து சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும். கல்வி வேலை வாய்ப்பில் 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். விஸ்வ கர்மா ஜெனன தினம் செப்டம்பர் 17 அரசு விடுமுறை வழங்கிட வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கையை வலியுருத்தி ராமநாதபுரம் நகர் போக்குவரத்து கழக பணிமனை அருகே விஸ்வ ஜனசக்தி தொழிற்சங் பேரவை பொதுச்செயலாளர் மகேந்திரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்மண்டல செயலாளர் முனியசாமி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story