சிங்கராயபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளையர் காளைகள் முன்பதிவு இன்று மாலை 5 மணிவரை

சிங்கராயபுரத்தில்  நாளை ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளையர் காளைகள் முன்பதிவு இன்று மாலை 5 மணிவரை
X
சிங்கராயபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளையர் காளைகள் முன்பதிவு இன்று மாலை 5 மணிவரை நடைபெறும்.
அரியலூர் பிப்.27- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சிங்கராயபுரம் கிராமத்தில் வருகின்ற (நாளை)28ம் தேதி ஜல்லிகட்டு நிகழ்வானது அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 27ம் தேதி மாலை 5 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். அதேபோல் மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 27. தேதி மாலை 5 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி அரியலூர் மாவட்டத்தின் இணையதள விண்ணப்ப பதவின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் பெற்றுள்ள நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிப்படுவார்கள். வேறு எந்தவிதமான டோக்கன் வைத்துள்ள நபர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
Next Story