தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் சேலம் உள்பட 5 மாவட்டங்களில் குறைதீர்க்கும் கூட்டம்

X
சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் சார்பில், மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி பெரியசோரகையில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியிலும், நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் செல்லப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளியிலும், தர்மபுரியில் பாப்பாரப்பட்டி பரம்வீர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கிருஷ்ணகிரியில் கட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த தாசம்பாளையம் அருண் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், இ.பி.எப்.அட்வான்ஸ்கள் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல்பாதி கூட்டமும், மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை இரண்டாம் பாதி கூட்டமும் நடக்கிறது. எனவே, கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்கு உட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Next Story

