தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது - நடிகர் சரத்குமார் பெரம்பலூரில் பேட்டி

X
ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை தாரை பூசி அழிப்பதால் ஹிந்தி அழிய போவதுமில்லை, 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தமிழ் எப்படி அழியும், 200 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஆங்கிலே மொழியை கற்றுக் கொள்கின்றோம் ஆனால் 70 கோடி மக்கள் பேசும் ஹிந்து மொழியை கற்றுக் கொள்வதற்கு ஹிந்தி திணிக்கிறார்கள் என கூறுகின்றனர்.
தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது - நடிகர் சரத்குமார் பெரம்பலூரில் பேட்டி பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான சரத்குமார் சிறப்புரையாற்றி சமத்துவ விருந்தினை தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை,தொகுதி குறைக்கப்படுகிறது என தெரிந்தால் அனைவரும் சேர்ந்து போராடலாம் அதை விட்டுவிட்டு தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை, போதை, வேங்கை வயல் பிரச்சனை ஆகியவற்றில் மும்மரம் காட்டவில்லை தமிழ் வளர்க்கிறேன் என சொல்லுகின்றார்கள் எங்கே வளர்க்கிறார்கள், ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை தாரை பூசி அழிப்பதால் ஹிந்தி அழிய போவதுமில்லை, 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தமிழ் எப்படி அழியும், 200 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஆங்கிலே மொழியை கற்றுக் கொள்கின்றோம் ஆனால் 70 கோடி மக்கள் பேசும் ஹிந்து மொழியை கற்றுக் கொள்வதற்கு ஹிந்தி திணிக்கிறார்கள் என கூறுகின்றனர். மத்திய அரசு எந்த சிறந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பது என திமுக முடிவெடுத்துள்ளனர். அதேபோல் த வெ க வும் எடுத்துக் கொள்கின்றனர். இந்தப் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 5 லட்சம் கோடி கொடுத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் கொண்டு வந்ததற்கான வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என கேட்டுக்கொள்கின்றேன். திமுக பெரிய பாலம் போன்ற வேறு எந்தத் திட்டங்களும் செய்யவில்லை. அண்ணாமலை மீண்டும் தலைவராக வரும்போது அவரை முதலமைச்சராக அமர்த்துவது என் கடமை,அவருக்காக நான் உழைப்பேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன்,அரியலூர் மாவட்ட தலைவர் பரமேஷ், மாவட்ட பொறுப்பாளர் சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

