சமுதாயக்கூட தீ விபத்து 5 டன் பிளீச்சிங் பவுடர் வீண்

X
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி சமுதாயக்கூடத்தில் 5 டன் எடை கொண்ட 25 கிலோ பிளீச்சிங் பவுடர் 200 மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென சமுதாயக்கூடத்தில் இருந்து புகை பரவியது. உடனே, கிராமமக்கள் சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் பிளீச்சிங் பவுடர் இருந்த சாக்கு மூட்டைகள் எரிந்து வீணானது. இதனால், வெப்பம் அதிகமாகி உள்ளே இருந்த பல பொருட்கள் சேதமடைந்தன. அங்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

