பேராவூரணி அருகே அரசு அனுமதியின்றி மணல் கடத்திய 5 பேர் கைது டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் ராமகிருஷ்ணாபுரம் பகுதி வழியாக செல்லும் அக்கினி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி சிலர் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (வயது 60), ஆரோக்கியசாமி (69), சிவக்குமார் (50) மற்றும் சிவனாம்புஞ்சையைச் சேர்ந்த ஆறுமுகம் (63), சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த அமானுல்லா (29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், மணலுடன் 5 டயர் மாட்டு வண்டிகளையும் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
Next Story

