அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள்

விருது
அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள் கிடைத்துள்ளன. மாநில சாலை போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2023-24-ம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், எரிபொருள் சிக்கனத்துக்கு புறநகர் மற்றும் நகர் ஆகிய 2-க்கும் முதலிடங்கள்,டயர் அதிக உழைப்பு திறனில் புறநகருக்கு முதலிடம், நகருக்கு 2-ம் இடம், பேருந்துகள் அதிக பயன்பாட்டுக்கு நகருக்கு முதலிடம் என 5 விருதுகள், சான்றிதழ்கள்,கேடயம் மற்றும் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடியிடம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கிரண்பேடி வழங்கினார்.
Next Story