ஜப்பானுடன் இணைந்து சந்திராயன் - 5 திட்டம்

X
இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று குமரி மாவட்டம், நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி அன்று விண்வெளியில் நாம் இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்பினோம். டாக்கிங் என்ற முறையில் செயற்கை கோள்களை ஒன்றாக சேர்த்து, தற்போது வெற்றிகரமாக இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பரிசோதனை மேற்கொண்டு வெற்றி கண்டதில் இந்தியா நான்காவது நாடாகும். வருங்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக ஆளில்லா சிறிய ராக்கெட்டுகள் தயாரித்து அதில் ரோபோக்கள் அனுப்பி சோதனை நடத்தப்பட உள்ளது. ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து சந்திராயன் - 5 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் மூலம் மனிதர்கள் இல்லாமல் ரோபோக்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும். மகேந்திர கிரியில் அதிக நவீன செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகள் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகள் நடக்கிறது. அதன் மூலம் பல சாதனைகள் படைப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

