வாணியம்பாடியில் சிகரெட்டில் உள்ள புகையிலையை அகற்றிவிட்டு, அதில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து வந்த 5 இளைஞர்கள் கைது

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சிகரெட்டில் உள்ள புகையிலையை அகற்றிவிட்டு, அதில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து வந்த 5 இளைஞர்கள் கைது ஒருவர் தலைமறைவு அவர்களி டம் இருந்து 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், 10,500 ரூபாய் பணம், கேமிரா, இருசக்கர வாகனம், மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் வாணியம்பாடி நகர காவல்துறையினர் நடவடிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேதாஜி நகர் பகுதியில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவுனர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அங்கு சிகரெடில் உள்ள புகையிலையை அகற்றிவிட்டு, அதில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தகள் ராஜசேகர், கௌதம், சந்தோஷ், வினாயகம், செல்வம், ஆகிய 5 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 1. 1/2 கிலோ கஞ்சா மற்றும், இருசக்கர வாகனம், 10,500 ரூபாய் பணம், 8 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 3 கீபேட் செல்போன்கள் என மொத்தம் 11 செல்போன்கள், மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், கேமிரா ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குபதிவு செய்து 5 பேரை ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Next Story

