முன்னாள் காவலர் கொலை வழக்கில் 5 பேர் கைது

X
நெல்லை டவுனில் முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று (மார்ச் 23) மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர்முகமது என்பவர் இந்த கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த படுகொலை வழக்கில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story

