கிளியானூர் அருகே வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்

X

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது: நகை பறிமுதல்
கிளியனுார் அடுத்த எறையனுார் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சரோஜா, 38; இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 9ம் தேதி இரவு 16 சவரன் நகை, 90 ஆயிரம் ரூபாய், வீட்டு பத்திரங்கள் கொள்ளை போனது.இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சிலரை பிடித்து விசாரித்தனர்.அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மலை சேர்ந்த முருகன், 37; சிவா, 30; நல்லாத்தூர் பொத்த மூக்கு (எ) மணிகண்டன், 29; சின்னசேலம் பிரகாஷ், 27; சென்னை, பெரிய பாளையம் சரவணன், 25; ஆகியோர் கூட்டாக சேர்ந்து, சரோஜா வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பதும், ஜாமினில் வெளியே வரும் இவர்கள், தொடர்ந்து திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.விசாரணைக்குப் பின், 5 பேரையும் கைது செய்து, 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story