ஜோலார்பேட்டை அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி கட்டையால் தாக்கி 5 சவரன் தங்க தாலி பறிப்பு

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி கட்டையால் தாக்கி 5 சவரன் தங்க தாலி பறிப்பு
X
ஜோலார்பேட்டை அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி கட்டையால் தாக்கி 5 சவரன் தங்க தாலி பறிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி கட்டையால் தாக்கி 5 சவரன் தங்க தாலி பறிப்பு மர்ம நபர்கள் குறித்து போலிசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலாவடி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(70) இவர் மற்றும் இவரது மனைவி கனகா(64) இருவரும் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்களுக்கு நடுவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் மூதாட்டி கனகா வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற போது மர்ம நபர் அந்த மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி போர்வையால் முகத்தை அழுத்தி அங்குள்ள கட்டையால் சரமாரியாக தாக்கிய கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.இதில் மூதாட்டி படுகாயம் அடைந்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.இதை அறிந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் மூதாட்டியின் மகன் ஆறுமுகம் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story