ஆப் மூலம் பழகி ஆந்திர மாநில இளைஞரை ஏமாற்றிய 5பேர் கைது

ஆந்திர மாநில இளைஞரை நண்பர்கள் செயலி என்ற சமூக வலைதளத்தின் மூலம் பெண் போல பழகி ஆந்திர மாநில வாலிபரை வரவழைத்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், G pay மூலமாக பணம் ஐந்தாயிரம் ஏமாற்றி வழிப்பறி செய்த 5- வாலிபர்களை கைது செய்த போலீசார்
திருவள்ளூர் மாவட்டம் சின்னம்மா பேட்டை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வாலிபர்கள் ஒன்றிணைந்து ஆந்திர மாநில இளைஞரை நண்பர்கள் செயலி என்ற சமூக வலைதளத்தின் மூலம் பெண் போல பழகி ஆந்திர மாநில வாலிபரை வரவழைத்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், G pay மூலமாக பணம் ஐந்தாயிரம் ஏமாற்றி வழிப்பறி செய்த 5- வாலிபர்களை கைது செய்த போலீசார்.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா சின்னம்மா பேட்டை 1)ரகுமான், 2)டெல்லி கணேஷ், அருகில் உள்ள தொழுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த 3)கார்த்திகேயன், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த- 4)கௌதம், 5)ஷாம் ஆகிய ஐந்து பேரும் ஒன்றிணைந்து நண்பர்களான இவர்கள் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ள (ஃப்ரெண்ட் ஆப்) (நண்பர்கள் செயலி) இதில் கணக்கு தொடங்கி பெண்கள் போல் நாடகம் ஆடி ஆந்திர மாநிலம் விஜயபுரத்தை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை மேற்கண்ட சமூகவலைதள செயலி மூலமாக பழகி பெண் போல பேசி ஆசை வார்த்தைகள் கூறி நேரில் சந்திக்க அழைத்துள்ளனர் ஐந்து நண்பர்கள் இதனை நம்பி ஆந்திர மாநில இளைஞர் கார்த்தி சின்னம்மா பேட்டை அரும்பாக்கம் செல்லும் சாலை அருகில் வந்துள்ளார் இருசக்கர வாகனத்தில் வந்த ஆந்திர மாநில இளைஞரை அங்கு மறைந்திருந்த பெண்கள் போல் பேசி பழகிய ஐந்து வாலிபர்களும் ஆந்திர மாநில இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டு, எலக்ட்ரானிக் வாட்சைப் பிடுங்கிக் கொண்டு, ஹெட் செட், G pay செயலி மூலம் ₹5,000 பிடுங்கி உள்ளனர் மேலும் கத்தியை காட்டி மிரட்டி ஆந்திர மாநில வாலிபர் இடத்தில் இதை அனைத்தையும் பிடுங்கி கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு ஐந்து வாலிபர்களும் மோட்டார் சைக்கிள் மூலம் தப்பி சென்றுள்ளனர் அவர்கள் சென்றவுடன் அருகிலுள்ள திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆந்திர மாநில இளைஞர் நடந்தவற்றை புகாராக தெரிவித்தார் இதனை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ஆந்திர மாநில இளைஞர் கொடுத்த செல்போன் நம்பர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் ஐந்து வாலிபர்களையும் கைது செய்தனர் திருவாலங்காடு போலீசார் இதனை எடுத்து இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் 5 வாலிபர்களையும் சிறையில் அடைத்தனர் போலீசார் தற்போது உள்ள சமூக வலைதளத்தில் பிரபலமான செயலி மூலம் பெண் குரலில் பேசி ஆந்திர மாநில இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வாலிபர்கள்ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story