எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டு மாயமான 5 மாணவிகள் சமயபுரத்தில் மீட்பு

X
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி. சமூகஅறிவியல் தேர்வு நடைபெற் றது. இந்த தேர்வை எழுதிய பவானியை சேர்ந்த 4 மாணவிகளும், சித் தோடு பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் என மொத்தம் 5 மாணவி கள் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ரத்தினகுமார் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் மாயமான மாணவி களை கண்டுபிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அவர்கள் மாணவிகளை தீவிரமாக தேடினர். மாணவிகளிடம் செல்போன் இருந்ததால், அதை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதாவது 5 பேரும் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் திருச்சி போலீசார் சென்று பார்த்த போது மாணவிகள் அங்கு இல்லை.இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தி னம் உத்தரவின்படி இரவு முழுவதும் மாணவிகளை சல்லடை போட்டு தேடும் பணி நடந்தது. மேலும் மாவட்ட காவல் துறை வாட்ஸ் அப் குரூப்களில் புகைப்படங்களை பதிவிட்டு தேடும் பணியும் நடந்தது.இந் நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி மாவட்டம் சமயபுரம் பஸ் நிறுத்தத்தில் 5 சிறுமிகள் நின்று கொண்டிருந்ததை இரவு ரோந்து பணியில் இருந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி கண்டுபி டித்தார். உடனடியாக அவர்களை அழைத்து சென்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய சித்ராவிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும் பவானியை சேர்ந்த காணாமல் போன 5 மாணவிகள் என்பதும், அவர்கள் தேர்வு முடிந்ததால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றதாகவும், பின்னர் அருகே இருந்த ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பவானி போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சமயபுரத்திற்கு சென்ற பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியிடம் மாணவிகள் 5 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 5 மாணவிகளையும் மீட்டு 2 கார்களில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கு மனநல ஆலோசகரை வரவ ழைத்து மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதைத்தொ டர்ந்து அவர்கள் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story

