சேலத்தில் ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

X
சேலம் அம்மாபேட்டை செல்வநகரை சேர்ந்த பெண் ஒருவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆசிரியை அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story

