விருதுநகரில் பருவகால மாற்றத்தால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது குறித்த 5 நாள் பயிலரங்கு தொடங்கியது*

X
தமிழகத்தில் முதன்முறையாக முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகரில் பருவகால மாற்றத்தால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது குறித்த 5 நாள் பயிலரங்கு தொடங்கியது விருதுநகரில் யுனிசெப்,மிஷன் சம்ருதி மற்றும் சீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பருவகால மாற்றத்தால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது குறித்த 5 நாள் பயிலரங்கை மாவட்ட ஆட்சிரியன் நேர்முக உதவியாளர் திருமதி நாச்சியார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பருவகால மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களை குடிநீர் வடிகால் வாரியம்,வேளாண்துறை,சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது,அதை ஒவ்வொரு அரசுத்துறையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் அதன்மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்ற அடிப்படையில் சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் இந்த பயிலரங்கில் எடுத்துரைத்தார். பயிலரங்கின் இறுதி நாளன்று துறைவாரியாக பருவகால மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.பிறகு இப்பிரச்சனைகளை கையாள்வது குறித்த ஒத்த கருத்து உருவாக்கப்படும் எனவும் தமிழகத்தில் முதன் முறையாக முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகரில் இது நடப்பதாகவும்,10 ஆண்டுகள் கழித்து ஏற்படக்கூடிய மாற்றத்தை மட்டுப்படுத்த இந்த பயிலரங்கம் உறுதுணையாக இருக்கும் என இந்த பயிலரங்கை நடத்தும் ரெட்ஆர்இந்தியா நிறுவனத்தின் தலைவர் புதுமை தெரிவித்தார்.
Next Story

