ஜெயங்கொண்டம் அருகே அதிகாலை தூக்கத்தில் மினி லாரி மோதி விபத்து 5 பேர் காயம்

ஜெயங்கொண்டம் அருகே அதிகாலை தூக்கத்தில் மினி லாரி மோதி விபத்து 5 பேர் காயம்
X
ஜெயங்கொண்டம் அருகே அதிகாலையில் தூக்கத்தில் மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியம் கட்டையில் ஏறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்தனர்
அரியலூர், ஏப்.22- ஜெயங்கொண்டம் அருகே  தூக்க கலக்கத்தில் சாலை தடுப்பு சுவற்றில் ஏறி மின்கம்பத்தில் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சத்திரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (55)இவர் தனது மகன்களான அர்ச்சுணன் (32), கண்ணன் (30) நடராஜன் (28), தனஞ்செயன் (24) உள்ளிட்ட நான்கு பேருடன்  மினி லாரியை இளைய மகன் மகன் கண்ணன் வண்டி ஓட்ட  அரியலூர் மாவட்டம் தா.பழூருக்கு விறகு வெட்டும் வேலைக்காக சென்றனர் அப்போது புதுச்சாவடி அருகே கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மினிலாரியை ஒட்டி வந்த கண்ணன் தூக்க கலக்கத்தில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் தடுப்புச் சுவரில் ஏறி மின் விளக்கு கம்பத்தில் மோதியது. இதில் டிரைவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  5 பேரும் பலத்த காயம் அடைந்தனர் காயமடைந்த 5 பேரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story