ஒசூர் அருகே விவசாய நிலங்களில் 5 யானைகள் அட்டகாசம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே போடூர்பள்ளம் பகுதியில் 5 காட்டு யானைகள், சில தினங்களாக சுற்றி வருகின்றன நேற்று முன்தினம் அந்த காட்டு யானைகள் ஆழியாளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும காலார் மிதித்தும் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர். அங்கு சென்று பட்டாசு வெடித்தும், 5 யானைகளை சான மாவு காட்டுக்கு விரட்டி அடித்தனர். இந்நிலையில் அந்த 5 யானைகள் மீண்டும் நேற்று காலை சானமாவு சப்படி, தின்னூர் கிராமங்களில் புகுந்து அங்கு விவசாய பயிர்களை சேதப்படுத்தின. யானைகள் நடமாடுவதால் சானமாவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

