நல்லூர் அருகே கள்ளசாராயம் காய்ச்சிய 5 பேர் கைது.

Paramathi Velur King 24x7 |26 April 2025 7:13 PM ISTநல்லூர் அருகே கள்ளசாராயம் காய்ச்சிய 5 பேர் கைது. அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர்,ஏப்.26: நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ் தலைமையில் நல்லூர் போலீசார் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் இணைந்து நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் திடுமல் குட்ட பள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி (61). என்பவரிடம் இருந்து கள்ளச்சாராயம், காய்ச்சிய இடத்தில் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சின்னமணி என்கிற பாலசுப்ரமணியம் (64), பூபதி (62),முத்துசாமி (63)அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (60) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 லிட்டர் ஊறல் சாராயம்,17 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
