வாணியம்பாடியில் அரசு மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த 5 பேர் கைது,

வாணியம்பாடியில் அரசு மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த 5 பேர் கைது,
X
வாணியம்பாடியில் அரசு மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த 5 பேர் கைது,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசு மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த 5 பேர் கைது, அவர்களிடம் இருந்து 1000 மதுபான பாட்டில்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல். ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் அரசு மதுபான கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவலர்களுக்கு உத்தரவிட்டத்தின் பேரில், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.. அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த், புதுமனை நடுப்பட்டறை பகுதியை சேர்ந்த லெனின் (எ) இளந்தென்றல், கிருஷ்ணன் வட்டம் பெத்தகல்லுப்பள்ளியை சேர்ந்த பாபு, தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்த அரவிந்த், மேட்டுபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்து 1000 மதுபான பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து, மதுபானங்கள் மற்றும் 5 பேரையும் அம்பலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து 5 பேர் மீது அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story