சேலத்தில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் செல்போன்கள் பறித்த 5 பேர் கைது

சேலத்தில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் செல்போன்கள் பறித்த 5 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாநகரில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் மற்றும் செல்போன் பறிக்கும் கும்பலை பிடிக்க பள்ளப்பட்டி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் பயணிகளிடம் பணம், செல்போன் பறிக்கும் 5 பேர் கொண்ட கும்பல் நேற்று போலீசாரிடம் சிக்கியது. விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 48), பிரகாஷ் (31), தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு (49), ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த சபீர் (40), திருப்பூர் மாவட்டம் புதூர் காந்தி நகரை சேர்ந்த சங்கர் (35) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயணிகளிடம் திருடிய 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story