தென்காசி குற்றால அருவிகளில் 5வது நாளாக குளிக்க தடை

X
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக பல அறிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் நீர் நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையும் வெள்ள தடுத்து நடவடிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய விட்டு விட்டு மழை பொழிந்ததாலும் இன்று காலையில் இருந்த ம் மழை தொடர்வதாலும் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்று ஐந்தாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது
Next Story

