சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் பட்டாசு உற்பத்தி பணிகள் 5வது நாளாக பாதிப்பு...

சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் பட்டாசு உற்பத்தி பணிகள் 5வது நாளாக பாதிப்பு...
X
சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் பட்டாசு உற்பத்தி பணிகள் 5வது நாளாக பாதிப்பு...
சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் பட்டாசு உற்பத்தி பணிகள் 5வது நாளாக பாதிப்பு... சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருத்தங்கல், சாட்சியாபுரம், சித்துராஜபுரம், பாறைப்பட்டி, அனுப்பன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 5வது நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. காலை முதல் பெய்து வரும் சாரல் மழையினால் பணிக்கு செல்லும் பொதுமக்கள் பெரும்பாலானோர் நனைந்தபடியும் ஒரு சிலர் குடை பிடித்தபடியும் செல்கின்றனர். இதனிடையே தொடர் மழை காரணமாக சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி பணிகள் இன்று 5வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது பட்டாசு தயாரிக்க போதிய வெப்பநிலை இல்லாதது உள்ளிட்ட உகந்த தட்பவெட்ட சூழல் இல்லாத காரணத்தினால் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
Next Story