திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா
X
திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக கலெக்டர் பிரதீப் குமார் கூறினார்
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிக ரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநி லங்களில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங் கியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏற்றாற்போல் அந்தந்த மாநிலங் கள் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் கணிச மாக உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வும், சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுதல், சமூக இடைவெ ளியை கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கொரோனாவுக்காக பயன்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள் ளனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளனர். ஆபத்தான நிலையில் இல்லை. ஆனாலும் தமிழக அரசு கூறியபடி கூட்டம் அதிகமாக உள்ள இடங்க ளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். மற்ற தொற்றுக்கள் ஏதும் பரவாமல் தடுக்கும். இந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து தான் இருக்கிறது. ஒரேபகுதியில் அதி கமானோருக்கு காய்ச்சல் இருந்தால், அதற்கேற்றார்போல் நடவடிக்கை எடுக்கப்படும்.
Next Story