ஏற்காட்டில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது

X
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலைப்பாதையில் நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்டு இருந்த விபத்து எச்சரிக்கை பலகையை சிலர் பிடுங்கி வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவா, கார்த்திக், ஆகாஷ், பிரவீன், அரவிந்த் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Next Story

