வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கருநாக பாம்பால் பரபரப்பு.*

X

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கருநாக பாம்பால் பரபரப்பு.*
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கருநாக பாம்பால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது கூமாபட்டி காவல் நிலையம் .இந்த காவல் நிலையம் ரகுமத்நகர் என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவல் நிலையத்தை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் செடிகள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு காவல் நிலையத்திற்குள் சுமார் 5 அடி நீளம் உள்ள கருநாகப் பாம்பு புகுந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வத்திராயிருப்பு தீயணைப்பு துறை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி கருநாக பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்..காவல் நிலையத்திற்குள் புகுந்த கருநாகப் பாம்பால் காவல் நிலையம் பரபரப்பானது.
Next Story