புளியங்குடி அருகே 5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

புளியங்குடி அருகே 5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
X
5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டை விலக்கில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இளைஞரிடம் சோதனை நடத்தினா். அவா் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா், வாசுதேவநல்லூா் புதுமந்தை தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டியன் மகன் இளங்கோவன் (30) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Next Story