மோகனூர் அருகே 5 ஏக்கர் கோரை தீயில் எரிந்து சேதம்.

X
Paramathi Velur King 24x7 |16 Jun 2025 7:40 PM ISTமோகனூர் அருகே 5 ஏக்கர் கோரை தீயில் எரிந்து சேதம் ஆனது.
பரமத்தி வேலூர்,ஜூன்.16: பரமத்தி வேலூர் தாலுகா மணப்பள்ளி தெற்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (45). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. 5 ஏக்கர் நிலத்தில் பாய் தயாரிக்கும் கோரை பயிர் செய்திருந்தார். கோரை அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கோரையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி தீ வேகமாக எரிய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து பலத்த காற்று அடித்ததால் தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அஜித்குமார் புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கோரையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 ஏக்கர் கோரை தீயில் எரிந்து தீக்கிரையானது.
Next Story
