கருங்கண்ணி பாலம் முதல் பிரதாபராமபுரம் வரை உள்ள 5 கிலோ மீட்டர் பாசன ஆறுகளை

கருங்கண்ணி பாலம் முதல் பிரதாபராமபுரம் வரை உள்ள 5 கிலோ மீட்டர் பாசன ஆறுகளை
X
தூர்வார வலியுறுத்தி கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கேனல் பாசன கீழ்குமுழியை தூர்வார வேண்டும். கால்வாயில் உள்ள தடுப்பு அணைகளில் சேதமடைந்துள்ள  அனைத்து பலகைகளையும் புதுப்பிக்க வேண்டும். கருங்கண்ணி பாலம் முதல் பிரதாபராமபுரம் வரை உள்ள 5 கிலோ மீட்டர் பாசன ஆறுகளை தூர்வார வேண்டும். விழுந்தமாவடி இறவை மனை பாசன வாய்க்கால் கரையை பதப்படுத்த வேண்டும். மகிழியான்  வாய்க்காலை தூர்வார வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் வீ.மணிவண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சி.ஜி.கனகசுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து, வெண்ணாறு பாசன பகுதி உதவி பொறியாளர் வினோத் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்ததின்பேரில் தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன பகுதி விவசாய சங்கத்தை சார்ந்த எஸ்.ஶ்ரீராமன், ஓ.எஸ்.இப்ராஹிம், ஏ.ஹபீப் முஹம்மது, ஆர்.விஸ்வநாதன், இ.பி.காமராஜ் மற்றும் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story