வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கலி பறித்த மர்ம நபர்கள் மற்றொரு வீட்டிலும் ஒரு பவுன் நகை திருட்டு

வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கலி பறித்த மர்ம நபர்கள் மற்றொரு வீட்டிலும் ஒரு பவுன் நகை திருட்டு
X
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் தப்பி ஓடிய திருடனை பிடிக்க போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் மனைவி பிரதீபா (35). செல்வக்குமார் டிரைவாக உள்ளார். அவர் வீட்டில் இல்லாததால், 2 குழந்தைகளுடன் பிரதீபா அவரது மாமனார் வீட்டில் நேற்றிரவு மாமனார் சிங்காரவேலு, மாமியார் கிருஷ்வேணியுடன் ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார்.வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கதவு தாழ்பாள் போடாமல் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை வேளை சுமார் 2.30 மணி அளவில், வீட்டனுள் புகுந்த மர்ம நபர்கள் பிரதீபா அணிந்திருந்த 4.5 பவுன் தாலிக்கொடி மற்றும் அரை பவுன் தங்க சங்கிலியை கொண்டு தப்பி ஓடினார். விழித்துப்பார்த்த பிரதீபா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து திருடனை பிடிப்பதற்குள் தப்பி ஓடி தலைமறைவானன். இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, கொள்ளையனின் அங்க அடையாளங்கள், விட்டுச் சென்ற தடயங்களை வைத்தும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் தப்பி ஓடிய திருடனை பிடிக்க போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று அதிகாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே கிராமத்தில், மனோகரன் மனைவி பாக்யலட்சுமி என்பவரது வீட்டில் ஒரு பவுன் மதிப்புள்ள தோடு, மோதிரம் ஆகியவற்றையும் மர்ம மனிதர்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
Next Story