அரியலூர் பெரியார் நகர் 5 வந்து குறுக்கு தெரு கல்லூரி சாலையில் கொட்டப்படும் குப்பை சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம்.

X
அரியலூர் ஜூன்.26- அரியலூர் நகராட்சி பெரியார் நகர் 5வது குறுக்குத் தெருவில் குப்பைத்தொட்டி இல்லாததால் தெருமுனையில் குப்பைகளை கொட்டி மாடுகள் நாய்கள் குப்பைகளை கிளறி துர்நாற்றம் வீசி நோய்கள் பரப்பும் அபாயத்தில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரியலூர் மாவட்டத்தில் அரியலூரில் கல்லூரி சாலையில் பெரியார் நகர் 5வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து வைத்திருந்து நகராட்சி பணியாளர்கள் வந்து கேட்கும் போது கொடுக்காமல் இருந்து அல்லது சேகரிக்காமல் இருந்தும் வெளியே செல்லும்போது கூட்டி அள்ளி அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சேகரித்து அதை தெருமுனையில் வீசி எறிந்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது அந்த கவர்களில் உள்ள பொருட்களை நாய்கள் பிரித்து கடித்து சிதற விடுகின்றன. வீட்டில் வாங்கப்படும் மூட்டைகள் அழுகிய முட்டை ஓடுகள் மற்றும் மீன் கழிவுகள் சிக்கன் கழிவுகள் மற்றும் உள்ள இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் நாய்கள் கடித்து சிதற விடுகின்றன. மேலும் தற்போது உள்ள மாம்பழ சீசன் மற்றும் நுங்கு சீசன் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் சாப்பிட்டு அதனை மற்றும் குப்பை மக்காத குப்பை என்று கூட பாராமல் குப்பைகளை கழிவுகளை தெருமுனையில் வீசி எறிந்து செல்கின்றனர். இதனை மாடுகள் மேய்ந்து சிதற விடுகின்றனர் இதனால் பல்வேறு கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகின்றது இது மட்டுமல்லாமல் சில நாட்கள் சேர்ந்ததால் இதே துர்நாற்றம் மேலும் மேலும் சேரும்போது தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகின்றது. நகராட்சியினர் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது பொதுமக்களிடத்தில் இந்த இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை பலகை அமைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

